சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் நீல நாராயணன்(49). இவருக்கு கரோனா நோய் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல் மாடியில் உள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து இவர் தனது செல்போனை அருகில் வைத்துவிட்டு பெட்டில் படுத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு நபர் திடீரென்று இவரது செல்போனை திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார்.
இதனை அருகிலிருந்த நோயாளி ஒருவர் கண்டு கூச்சலிட்டபோது, பணியிலிருந்த காவலாளி அந்த நபரை மடக்கி பிடித்தார்.
பின்னர் நடத்திய விசாரணையில், செல்போனை திருடியது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சுரேஷ் (24) என்பது தெரியவந்தது.
இவர் கடந்த 15ஆம் தேதி முதல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணிப்புரிந்து வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று (செப். 25) ணியில் ஈடுபடும் போது நீல நாராயணனின் செல்போனை திருடியது தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து செல்போன் திருட முயற்சித்த சுரேஷ் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: விமான நிலைய கழிவறையில் துப்பாக்கித் தோட்டாக்கள்: காவல் துறை விசாரணை!