1956 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசிடம் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்த சங்கரலிங்கனார், ஜூலை மாதம் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மொழிவழியாக மாநிலங்களை பிரிக்க வேண்டும், மதராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட இவரது கோரிக்கைகளை முதலமைச்சர் காமராஜ் நிராகரித்துவிட்டார்.
இருப்பினும், கொண்ட நோக்கத்தில் இருந்து பின் வாங்காமல் அறிஞர் அண்ணா, ம.பொ.சி, ஜீவா போன்ற தலைவர்களின் வேண்டுகோளையும் ஏற்காமல், 76 ஆம் நாளான அக்டோபர் 13 ஆம் தேதியை எட்டியது சங்கரலிங்கனாரின் உண்ணாவிரத போராட்டம். அன்றே அவரது உடல்நிலை மோசமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் நிறைவேறா கோரிக்கைகளுடன் அவரது உயிர் காற்றில் கலந்தது.
தியாகி சங்கரலிங்கனாரின் கோரிக்கைகள் பல பின்னாளில் நிறைவேறின. உயிர் விடினும் கொள்கை பிறழா தியாகியான அவரது 65 ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட சங்கரலிங்கனாரின் உருவப்படத்திற்கு, சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் சிந்தனை கீழ்த்தரமாக இருக்கிறது'- காங்கிரஸ் தலைமையை வெளுத்து வாங்கிய குஷ்பூ