ETV Bharat / city

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

justice
justice
author img

By

Published : Jan 31, 2020, 1:13 PM IST

மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும் என்ற தலைமை நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் அதில் பங்கேற்றதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

இது நீதிபதிகளின் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது எனவும், இப்பேரணியின்போது ஏதேனும் பிரச்னை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வுபெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படலாமா? இதை மன்னிக்கவே முடியாது என்றும் சாஹி தெரிவித்தார்.

போராட்டம், பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் அல்ல என்ற தலைமை நீதிபதி சாஹி, முன்னாள் நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் அத்துமீறி பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்புக் குழு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதற்கடுத்து, மத்திய அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பாதுகாப்பு இல்லை என்றும் வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் நீதிமன்றத்திற்குள் வருகிறார்கள் என்பதால், உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் முழுமைக்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 2ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் ஆபாச அவதூறு பதிபவர்களைக் கண்டறிய சிறப்புப் பிரிவு அமைக்க உத்தரவு!

Intro:Body:சென்னை உயர்நீதிமன்ற வளாகத்ததிற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துர்தஷ்டவசமானது என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். இது நீதிமன்றத்திற்கு மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். ஓய்வு பெற்ற நீதிபதிகள் பங்கேற்றதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது

இவ்வாறு நீதிமன்ற வளாகத்திற்குள் பேரணியில் பங்கேற்றது நீதிபதிகள் மாண்பை சீர்கெடுக்கும் செயலாக உள்ளது. நீதிமன்றத்திற்கு இந்த பேரணியின் போது பிரச்சனை நிகழ்ந்திருந்தால் யார் மீது வழக்குப்பதிவு செய்வது?

நீதிமன்றம் பொது சொத்து, தனி நபர்களானது அல்ல என்பது ஓய்வு பெற்ற நீதிபதிகள் உணர்ந்து செயல்பட வேண்டும். நீதிபதிகளாக இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் நீதிபதிகளாக கருதப்படுவர். அவ்வாறு இருக்க வேண்டியவர்கள் நீதிமன்றத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்ப்படலாமா?இதை மன்னிக்கவே முடியாது

போராட்டம் பேரணி நடத்துவதற்கான இடம் நீதிமன்றம் இல்லை. நீதிமன்ற வளாகத்தில் அத்துமீறி முன்னாள் நீதிபதிகள் ஹரிப்பரந்தாமன், கண்ணன், அக்பர் அலி ஆகியோர் பேரணி நடத்தியது குறித்து நீதிமன்ற பாதுகாப்பு குழு விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மத்திய அரசு தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் போர்வையில் நக்சல்கள் அதிகரித்து வருகிறார். அவர்களை நீதிமன்றத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியவில்லை.

இது மட்டுமல்லாமல் நீதிமன்ற வளாகத்திற்குள் குடிப்பது போன்ற சட்ட விரோத நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளது. எனவே சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம் முழுமைக்கும் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பை நிரந்தரமாக வழங்குவது தொடர்பாக நீதிமன்ற பாதுகாப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச்2 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.