ETV Bharat / city

கெடிலம் ஆற்றில் மூழ்கி இறந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் ஆற்றில் குளித்தபோது மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

cuddalore
cuddalore
author img

By

Published : Jun 5, 2022, 6:50 PM IST

Updated : Jun 5, 2022, 7:17 PM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில், சங்கவி (18), பிரியா (19), மோனிஷா (16), நவநீதம் (20), சுமிதா (18), திவ்யதர்ஷிணி (10), பிரியதர்ஷிணி (15) ஆகிய 7 பேர் குளிக்க சென்றனர். குளிக்கும் இடத்தில் ஆழம் அதிகமாக இருந்ததால், ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக அனைவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: திடீரென பற்றி எரிந்த கார் - தொழிலதிபர் காயம்

Last Updated : Jun 5, 2022, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.