ETV Bharat / city

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.46 லட்சம் பணம் பறிமுதல் - ஹவாலா பணமா? என போலீசார் விசாரணை - ஹவாலா பணமா என போலீசார் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணி ஒருவர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 46 லட்சம் ரூபாய் பணத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

Central railway station
Central railway station
author img

By

Published : Jun 16, 2022, 10:18 PM IST

சென்னை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று(ஜூன் 16) காலை சென்னை சென்ட்ரலுக்கு வந்த பினாகினி விரைவு ரயிலின் பயணி ஒருவரது நடவடிக்கை, சந்தேகப்படும் வகையில் இருந்ததால் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவரை பிடித்து சோதனையிட்டனர்.

அப்போது அவரது பையில் 46 லட்சம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவரை சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அந்த நபர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவி(56) என்பதும், அவர் நகைக்கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

வேலூரில் உள்ள நாராயணன் என்பவரின் நகை கடைக்கு தான் நகை விற்பனை செய்துள்ளதாகவும், அந்த நகைக்குண்டான 46 லட்சம் பணத்தை விஜயவாடாவிற்கு சென்று வாங்கி வருவதாகவும் ரவி தெரிவித்தார். ஆனால், பணத்திற்குண்டான உரிய ஆவணம் இல்லாததால் போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 46 லட்சம் ரூபாய், ஹவாலா பணமா? என விசாரணை நடத்தி வருவதாகவும், வருமான வரித்துறையிடம் பணத்தை ஒப்படைக்க உள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.