ETV Bharat / city

எப்போது குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே - குடும்ப தலைவிக்கு ரூ 1000

குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என வெளியான தகவலுக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து எப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்னும் கேள்வி எழுந்துள்ளது.

smard card
smard card
author img

By

Published : Jul 9, 2021, 8:05 PM IST

Updated : Jul 9, 2021, 11:04 PM IST

குடும்பத்தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டம் குறித்த எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்தது.

ஆனால், குடும்ப அட்டையில், குடும்பத் தலைவராக பெண் இருந்தால் மட்டுமே ரூ.1,000 வழங்கப்படும் என்றும், குடும்ப தலைவராக ஆண் இருந்தால் தொகை வழங்கப்படமாட்டாது என்று பரவிய தவறான தகவல்களால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இதனிடையே, பலர் குடும்ப அட்டைகளில் பெண்களை குடும்பத் தலைவராக மாற்ற விண்ணப்பித்து வருகின்றனர்.

குடும்பத் தலைவிகளுக்கான, ரூ.1,000 உதவித் தொகை திட்டம் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான குறியீடுகளில், ஏதேனும் ஒன்று உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என அரசு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் NPHH-S, NPHH-NC ஆகிய 2 குறியீடுகளை கொண்ட அட்டைகளுக்கு வழங்கப்படமாட்டாது என்றும், குடும்பத் தலைவராக யார் இருந்தாலும் உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு

இந்த நிலையில், எப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்னும் கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில், குடும்பத்தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டத்திற்கான அறிவிப்பிற்கு மக்கள் காத்திருக்கின்றனர். இம்மாதம் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன்

Last Updated : Jul 9, 2021, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.