ETV Bharat / city

தகுதி வாய்ந்த இல்லத்தரசிகளுக்கு மட்டுமே ரூ.1,000 - மாதம் ஆயிரம்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது தகுதி வாய்ந்த குடும்பங்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

rs-1000-per-month-for-women-scheme-update

author img

By

Published : Sep 1, 2021, 10:19 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கையும் ஒரு காரணம் எனலாம். திமுக தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆர்வமாக காத்திருந்த நிலையில், இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிதி உதவித்தொகை, பணக்காரர்களுக்கும், மாத ஊதியம் பெறுபவர்களுக்கும் வழங்கக் கூடாது என்று விமர்சனங்களும், வழக்குகளும் எழுந்துள்ளன.

எனவே இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறி அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது எனத் தெரிவித்தார். இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை மற்றும் வீடுகளில், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, திருமண மண்டபத்தில் நடைபெறும் திருமணத்திற்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவித் தொகை கிடையாது எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. எனவே இல்லத்தரசிகளுக்கு மட்டுமே ரூ.1,000 பல்வேறு அளவுகோல்கள் இருக்கலாம் என தெரிகிறது.

இதையும் படிங்க: எப்போது குடும்ப அட்டைக்கு ரூ.1000? - விவரம் உள்ளே

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.