ஒவ்வொரு வருடமும் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னையில் உள்ள சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் ரிசர்வ் காவல் பிரிவினர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜூ தலைமையில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜு, ”ஊரடங்கு காலத்தில் ரயில்கள் இயக்கப்படாததால், பயணிகள் இங்கு வருவதில்லை. எனினும், ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்கள், ரயில் நிலையங்களின் பாதுகாப்புக் கருதி சோதனையிடுவது அவசியம்” எனத் தெரிவித்தார்.