சென்னை: தேசிய அளவிலான தடகள போட்டியில் பி.டி. உஷாவின் 23 வருட சாதனையை முறியடித்து தங்கப் பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி, ஒரு தங்கம் ஒரு வெள்ளி பதக்கத்தை வென்ற இலக்கியதாசன் ஆகியோரை ராயபுரம் திமுக வேட்பாளர ஐ ட்ரீம் மூர்த்தி நேரில் வரவழைத்து பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விளையாட்டின் மீது எனக்கு உள்ள ஆர்வத்தால் அவர்களை நேரில் அழைத்துப் பாராட்டினேன். வடசென்னையில் இளைஞர்கள் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிக்காக இவர்களை நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளேன். மேலும் அவர்கள் உலக அளவில் நடக்கும் தடகள போட்டியில் பங்கேற்பதற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்