ETV Bharat / city

ரயிலுக்குள் புகுந்து தந்தை.மகனை வெட்டிய ரவுடி கும்பல்... - Attack on electric train bound for Thiruvanmiyur

சென்னையில் ரயிலுக்குள் புகுந்த ரவுடி கும்பல், தந்தை மற்றும் மகனை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Sep 22, 2022, 8:09 AM IST

சென்னை: சென்னை துரைப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் ரவீஸ்வரன்(55). இவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு எம்.கே.பி நகரில் குடிபோதை தகராறில் உறவினர் ஒருவரை ரவீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி இணைந்து கொலை செய்துள்ளனர்.

இவ்வழக்கில், நேற்று(செப்.21) மதியம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ரவீஸ்வரன் மற்றும் தந்தை வேலுச்சாமி ஆஜராகி உள்ளனர்

பின்னர், இருவரும் திருவான்மியூர் செல்லும் மின்சார ரயிலில் ஏறி திரும்பிக்கொண்டிருக்கையில், திடீரென ரயிலுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள் ரவீஸ்வரனை கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.

காயமடைந்த ரவீஸ்வரனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்துள்ளதா அல்லது வேறு காரணமா என எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் ரயிலில் ஒரு கும்பல் புகுந்து வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமை: மருமகள் மீது தாக்குதல்...மாமியார், நாத்தனார் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.