ETV Bharat / city

ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது - வானதி சீனிவாசனுக்குப் பதிலளித்த பிடிஆர்

ஒன்றிய அரசு என்று அழைப்பது தொடர்பாக வானதி சீனிவாசன் சட்டப்பேரவையில் பேசியதற்கு, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துப் பேசியுள்ளார்.

rose-does-not-become-jasmine-ptr-reply-to-vanathi-srinivasan-in-assembly-regards
ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது- வானிதி சீனிவாசனுக்கு பதிலளித்த பிடிஆர்
author img

By

Published : Aug 18, 2021, 10:17 PM IST

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இன்று சட்டப்பேரவை நிகழ்வில், ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து கோவை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி பேசினார்.

"இதுவரை மத்திய அரசு என்று அழைத்துவிட்டு, தற்போது ஒன்றிய அரசு என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதன் மணம் மாறாது. அதுபோலத்தான், ஒன்றிய அரசு என்று அழைப்பதால் மத்திய அரசின் அதிகாரத்தை கூட்டவோ குறைக்கவோ முடியாது" என்றார், வானதி சீனிவாசன்.

ரோஸ் என்றும் மல்லிகை ஆகாது

இதற்கு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்துப் பேசும்போது, 'ரோஜா ரோஜாதான், ரோஜாவை நாங்கள் மல்லிகை என்று அழைக்கவில்லை. ரோஜா என்றும் மல்லிகை ஆகாது.

குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது, ஒன்றிய அரசுக்கு எதிராகப் பேசியும், மாநில உரிமைகளுக்காக குரலும் கொடுத்துவந்தார். ஜிஎஸ்டி மாநில உரிமைகளைப் பறித்துகொள்ளும் என்றுகூட பேசினார்.

மற்றவர்களுக்கு இருக்கின்ற இடத்தைப் பொருத்து கொள்கை மாறும். எந்த கொள்கையைப் பின்பற்றுகிறோம் என்பது மற்ற கட்சியினருக்கு அடிக்கடி மாறும்.

ஆனால், ஆட்சியில் இருந்தாலும்;இல்லாவிட்டாலும் எங்களது கொள்கை ஒன்றுதான் எப்போதும் அது மாறாது" என்றார்.

இதையும் படிங்க: கருணாநிதி செய்த தவறை ஸ்டாலினும் செய்வார் - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.