ETV Bharat / city

பாறைகளை வெடிபொருள்கள் வைத்து தகர்க்கப்படவில்லை - உயர் நீதிமன்றத்தில் அரசு பதில் மனு! - தமிழ்நாடு அரசு பதில்

சிங்கவரம் ரங்கநாதர் குடவரை கோயில் சாலை அமைப்பதற்காக, பாறைகளை வெடிபொருள்கள் வைத்து தகர்க்கப்படவில்லை எனத் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

chennai high court, explosives, rocks were not smashed, tn govt to chennai high court, court news in tamil, court news tamil nadu, latest court news tamil, chennai high court news, சென்னை உயர் நீதிமன்ற செய்திகள், நீதிமன்ற செய்திகள், உயர் நீதிமன்ற செய்திகள், பாறை வெடி  தமிழ்நாடு அரசு பதில், சிங்கவரம் ரங்கநாதர் குடவரை கோயில்
சிங்கவரம் ரங்கநாதர் குடவரை கோயில்
author img

By

Published : Nov 19, 2021, 8:10 PM IST

சென்னை: ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்துள்ளார். அதில், விழுப்புரம் மாவட்டம் சிங்கவரம் பகுதியிலுள்ள மலைமேல் பாறையை குடைந்து கட்டப்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீரங்கநாதர் குடவரை கோயிலில், 24 அடி நீளத்தில் அனந்தசயன நிலையிலான பெருமாளின் உருவம் பாறையில் செதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி கோட்டைகோட்டையிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல, 120 படிகள் உள்ள நிலையில், கோயிலுக்கு சாலை அமைப்பதாக கூறி, உள்ளூர் எம்.எல்.ஏ., ஆதரவுடன், பாறையை வெடி வைத்து தகர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சாலை அமைக்கவோ, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவோ எந்த அனுமதியும் இல்லாமல் பணிகள் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 35 வருடத்தில் 6 கோயில்களை மட்டுமே, பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக தொல்லியல்துறை அறிவித்துள்ளதாலும், 2000ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த கோயிலையும் அறிவிக்காததாலும் புராதன கோயில்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோயில் பகுதிகளில் குவாரி பணிகளை மேற்கொள்ளவும், கட்டுமானம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தடை விதிக்க வேண்டுமெனவும், அறங்காவலர்களை நியமிக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார். சட்டவிரோத பணிகளை மேற்கொள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை கோரிய புகாரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவும் மனுவில் கோரியுள்ளார்.

கோயிலுக்கு சாலை அமைக்கும் பணிகளுக்கு பெறப்பட்ட ஒப்புதல், விடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி, நிதி ஆதாரம் ஆகியவை குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதே கோரிக்கை தொடர்பாக சிறப்பு அமர்வில் மனுதாரர் முறையீடு செய்ததாகவும், அப்போது விரிவான அறிக்கை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 2.86 கோடி ரூபாய் செலவில் சாலை அமைக்கப்படுவதாகவும், வெடி வைத்து பாறைகள் எதுவும் தகர்ப்படவில்லை என்றும் தெரிவித்தார். பொதுமக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக சாலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், மலைக்கோயிலுக்கு சாலை அமைக்கும் பணியில் தற்போதுள்ள நிலை தொடர உத்தரவிட்டும், 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை சிறப்பு அமர்விற்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Jai bhim Movie: 'ஜெய்பீம் பிரச்னைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை' - இயக்குநர் பாரதிராஜவுக்கு அன்புமணி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.