ETV Bharat / city

ஆட்டோவில் சென்று கொண்டிருந்தவரிடம் சினிமா பாணியில் வழிப்பறி!

சென்னை: ஆட்டோவில் சென்று கொண்டிருந்த வடமாநிலத்தவரின் கைப்பையை சினிமா பாணியில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழிப்பறி
author img

By

Published : May 8, 2019, 1:24 PM IST

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிபானி மன்டி (55) என்பவர் கண் சிகிச்சைக்காக இரு உறவினருடன் ஹவுரா ரயில் மூலம் இன்று அதிகாலை சென்னை வந்துள்ளார். நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயாவிற்கு செல்வதற்காக இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து TN 05 AC 3587 என்ற ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

இந்நிலையில், ஆட்டோ பெரியமேடு EVR சாலை காந்தி இர்வின் சாலை அருகே செல்லும்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் ஆட்டோவின் ஓரமாக அமர்ந்திருந்த சிபானி மன்டியின் கைப்பையை சினிமா பாணியில் பறித்துச் சென்றனர். அதில் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 3 ஏடிஎம் கார்டுகளும் இருந்துள்ளது.

கைப்பை திருடு போனதால் அதிர்ச்சியடைந்த சிபானி மற்றும் அவரது உறவினர்கள் பெரியமேடு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் பெரியமேடு காவல்துறையினர் சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளைகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது வழிப்பறி...

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் சிபானி மன்டி (55).
இன்று அதிகாலையில் இவர் கண் சிகிச்சைக்காக உறவினர் இரண்டு நபர்களுடன் ஹவுரா ரெயில் மூலம் சென்னை வந்தார். பிறகு இறங்கி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து  TN 05 AC 3587 என்ற ஆட்டோ மூலம் நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா சென்றார்.

ஆட்டோ பெரியமேடு
EVR சாலை காந்தி இர்வின் சாலை அருகே வரும் வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் ஓரமாக அமர்ந்து இருந்த சிபானி மன்டியின் கைப்பையை பறித்து சென்றனர். அதில் ரூ. 20 ஆயிரம், 3 ஏடிஎம் கார்டுகள் இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.