சென்னை: தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள குருஜிசித்த மருத்துவம் மற்றும் மருந்து கடையில் நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடையில் பணம் இல்லாததால் மடிக்கணினி உள்பட சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருள்களை திருடிச்சென்றனர்.
மேலும் அடையாளம் தெரியாமல் இருக்க அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் திருடிச்சென்றனர். இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், குரோம்பேட்டை காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் இருந்த மற்றொரு சித்த மருத்துவ கடையிலும் சில நாள்கள் முன்பு அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்து சென்றதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் கொள்ளையர்களை உடனே பிடிக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.
சித்த மருத்துவமனையில் கொள்ளை: சிசிடிவி கேமராவையும் அபேஸ் செய்த திருடர்கள் - திருட்டு சம்பவம்
தாம்பரம் அருகே சித்த மருத்துவமனையில் கொள்ளையடித்த நபர்கள் அடையாளம் தெரியாமல் இருக்க அங்கிருந்த சிசிடிவி கேமராவையும் திருடிச்சென்றனர்.
![சித்த மருத்துவமனையில் கொள்ளை: சிசிடிவி கேமராவையும் அபேஸ் செய்த திருடர்கள் திருட்டு சம்பவம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:02:24:1624969944-tn-che-03-pharmacytheft-visual-script-7208368-29062021145736-2906f-1624958856-541.jpg?imwidth=3840)