ETV Bharat / city

செல்போன் கடையில் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு - செல்போன் கடையில் திருட்டு

திருமுல்லைவாயலில் அடையாளம் தெரியாத நபர் நேற்று நள்ளிரவில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 2 லட்சம் மதிப்புள்ள 10 செல்போன்கள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி
author img

By

Published : Jun 1, 2022, 1:18 PM IST

சென்னை: திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லதுரை (44). இவர் அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ஸ்ரீ சக்தி நகரில் ஜோதி ஹோம் அப்ளையன்ஸ் மற்றும் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் இன்று காலை கடைக்கு வந்த போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லதுரை உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் இருந்த 2 லட்சம் மதிப்பிலான 10 ஆண்ட்ராய்டு செல்போன்கள் மற்றும் 4,000 ரூபாய் பணம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து செல்லதுரை உடனடியாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சிசிடிவி காட்சி

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது கையில் ராடுடன் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கேட்டை தாவி குதித்து செட்டர் பூட்டை உடைத்து செல்போன்கள் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். திருமுல்லைவாயில் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவத்தால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.97 லட்சம் மோசடி: கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.