ETV Bharat / city

சாலைகளின் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் - சென்னை மாநகராட்சி

மழைக் காலத்தில் சாலையில் உள்ள பள்ளங்களில் ண்ணீர் தேங்கி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சாலைகளின் பராமரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும்

author img

By

Published : Nov 4, 2021, 8:48 AM IST

சென்னை : மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 5ஆயிரத்து 500 கி.மீ சாலைகள் உள்ளன, இதில் 942 உட்புற சாலைகள் மற்றும் தெருக்களில் 30 ஆயிரம் சதுர.மீ பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படடு வருகிறது.

சாலை குழிகளை சரிசெய்யும் பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மண்டலத்திற்கும் 10 லட்சம் வீதம் 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அந்தந்த மண்டல அலுவலர்கள் மேற்பார்வையில் உடனடியாக சாலைகளை சீர்செய்யும் பணிகளை முடித்து மாநகராட்சிக்கு அறிக்கை கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு முறையாக மேற்கொள்ளாமல் விபத்துக்கு காரணமாக அமைந்தால் , நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது.

சென்னை அரசு தலைமை செயலகத்தில் மரம் விழுந்து காவலர் ஒருவர் உயிரிழந்தது எதிரொலியாக அனைத்து பூங்காவிலும் உள்ள மரங்களை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்மழை பெய்தால் பூங்காக்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: உலகத் தலைவர்களை அதிர வைத்த தமிழ் இளம் விஞ்ஞானியின் உரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.