ETV Bharat / city

புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: விசிகவினர் சாலை மறியல் - Ambedkar statue desecrated in Pondicherry

புதுச்சேரி: அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை கைதுசெய்யக் கோரி விசிக கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலையை அவமதிப்பு  அம்பேத்கர் சிலை  புதுச்சேரியில் அம்பேத்கர் சிலை அவமதிப்பு  புதுச்சேரியில் விசிக கட்சியினர் சாலை மறியல் போரட்டம்  புதுச்சேரி மாநிலச் செய்திகள்  Pudhucherry News  Road blockade protest by VCK Party in Pudhucherry  VCK Party Road blockade protest  Ambedkar statue desecrated in Pondicherry  Ambedkar statue desecrated
Ambedkar statue desecrated
author img

By

Published : Dec 21, 2020, 10:53 AM IST

புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியை அடுத்த சூலமங்கலம் பேருந்து நிலையம் சந்திப்பில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று முன் தினம் (டிச. 19) அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் இச்சிலை மீது சாணம் பூசி உள்ளனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், விசிக கட்சியின் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து நெட்டபாக்கம் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்வதாக உறுதியளித்தன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினர்

இதற்கிடையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முத்துக்குமார், ரவிக்குமார், ரமேஷ், கார்த்திக் ஆகிய நால்வர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் ரிலையன்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்ட விசிக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.