சென்னை: அரசியல் கட்சியின் சின்னம், பெயர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை ரசிகர்கள் காத்திருங்கள் என, ரஜினி மக்கள் மன்றம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிவிப்பில்," இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கொள் காட்டி, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும் ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைமையிலிருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் வரை நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்கள் காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" என்று சுதாகர் குறிப்பிட்டுள்ளார்.