ETV Bharat / city

திறக்கப்படாத மின்னணு கடைகள்: பரிதவிக்கும் வியாபாரிகள்! - தமிழ்நாடு அரசு

கடந்த முறை செயல்படுத்தப்பட்டதுபோல சுழற்சிமுறையில் கடைகளைத் திறப்பதற்குக்கூட வியாபாரிகள் தயாராகத்தான் இருக்கிறோம் என ரிச்சி தெரு வியாபாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ரிச்சி தெரு வியாபாரிகள்
Ritchie Street Merchants
author img

By

Published : Jun 7, 2021, 6:32 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று இரண்டாம் அலை பாதிப்பு காரணமாக வரும் ஜூன் 7ஆம் தேதிவரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன்பின்னர் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள், பிளம்பர், எலக்ட்ரீசியன் போன்ற கைத்தொழில் சேவைகள், நோட்டுப் புத்தகக் கடைகள், ஹார்டுவேர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளைத் திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

அதேசமயம் லைட் பல்பு, ஸ்விட்ச் போன்றவை விற்பனை செய்யும் எலக்ட்ரிக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், செல்போன் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் மின்னணு கடைகளுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்தத் தொழிலை நம்பி உள்ள வியாபாரிகள் நீண்ட நாள்களாக வருவாயின்றித் தவித்துவருகின்றனர்.

சென்னையின் பிரபல மின்னணுப் பொருள் சந்தையான ரிச்சி தெருவில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளதால், அதில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கடைகளின் வியாபாரிகள், ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தின் முக்கியப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த மின்னணு சந்தையில், சார்ஜர், ஹெட்போன், பென்டிரைவ்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இங்கு பலவகையான மின் சாதனங்களுக்குச் சேவையும் வழங்கப்படுகிறது. மேலும், கடைகளைத் திறக்க சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கோரியபோதும் மாநகராட்சி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ரிச்சி தெருவில் செல்போன் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஷேக் தாவூத் பேசுகையில், "இந்த மின்னணு சந்தை திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் ஒரே நேரத்தில் கூடுவார்கள் என்பதால் தற்போதைய சூழ்நிலையில் இது திறக்கப்படாததே நல்லது எனக் கருதுகிறேன். அதே நேரத்தில் கடைகள் திறக்கப்படாததால் வியாபாரம் நடைபெறவில்லை, வருவாய் இல்லை.

இதனால் குடும்பத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, மக்களின் பாதுகாப்பு கருதி கடைகளை அடைக்கச் சொல்லி இருக்கிறது. எங்களுக்கு அரசு ஏதாவது ஒரு வகையில் உதவும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

மற்றொரு வியாபாரி இப்ரஹிம் பேசுகையில், "முன்பு நாள் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாயிலிருந்து ஆறாயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றுவந்தது. தற்போது, முற்றிலுமாகப் பணிகள் தடைபடுகின்றன. இதனால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட செலவுக்குப் பணம் இல்லாத நிலை உள்ளது. கடன் வாங்குவதற்குக்கூட யாரிடம் செல்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறோம்" என்று கூறினார்.

உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் வேறுவழியின்றி தடையை மீறி ஒரு சில வியாபாரிகள் மறைமுகமாக போதைப் பொருள்களை விற்பனை செய்வதுபோல செல்போன்கள், அது தொடர்பான மின்னணு சாதனங்களை விற்பனை செய்துவருகின்றனர். காவல் துறை வாகனம் ரோந்துக்கு வருவதைக் கண்டதும் உடனடியாக அந்த வியாபாரிகள் பதற்றத்துடன் கலைந்துசெல்கின்றனர்.

இது குறித்து ரிச்சி தெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் சுனில் அண்டா பேசுகையில், "கடந்த முறை செயல்படுத்தப்பட்டதுபோல சுழற்சிமுறையில் கடைகளைத் திறப்பதற்குக்கூட வியாபாரிகள் தயாராகத்தான் இருக்கிறோம். இருப்பினும் இதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களிலும் மின்னணு சந்தைகள் மூடப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிப்பதால் இது எங்களுக்கு மட்டும் தனிப்பட்ட ஒரு பிரச்சினை அல்ல. இருப்பினும் சந்தைகளைத் திறக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களிடம் வலியுறுத்திவருகிறோம். வருவாயின்றி உள்ள வியாபாரிகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என வருத்தத்துடன் கூறினார்.

இதையும் படிங்க: என்னது நான் பிரதமரா? ஹூமா குரேஷிக்கு விளக்கமளித்த சோனு சூட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.