சென்னை: பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "Vishing என்று அழைக்கப்படும் போன் கால் மூலம் ஓடிபி பெறுவது மற்றும் ஏடிஎம் கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையிலிருந்து முன்னேறி, மோசடி நபர்கள் தற்போது பல்வேறு உத்திகளை கையாண்டு பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர். உதாரணமாக, கேஸ் மானியம் உங்கள் அக்கவுண்டிற்கு வரும்.
எனவே வங்கி கணக்கு நம்பர் கொடுங்கள் என்றும், போட்டித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் போது மொபைல் எண்ணை மாற்றி உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் மொபைலுக்கு ஒரு ஓடிபி வரும் அதை கொடுக்குமாறு கூறி போன் அழைப்புகள் வரும். அந்த மோசடி நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதேபோல் பேன் கார்டு மற்றும் KYc details update செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மொபைல் எண் பிளாக் செய்யப்படும் அல்லது வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும் என்று வரும் SMS-களை பொதுமக்கள் நம்ப கூடாது. அந்த SMS இல் வரும் லிங்கை கிளிக் செய்ய கூடாது, அதிலுள்ள மொபைல் எண்ணுக்கு கால் செய்ய கூடாது.
மேலும் அமேசான் Part time Job, Crypto trading, Investing என்பது போல் வாட்ஸ்அப்பிலோ, டெலிகிராமிலோ வரும். மெசேஜ்களை நம்பி யாருக்கும் பணம் அனுப்ப கூடாது. OLX போன்ற App-களில் பொருளை விற்கும் போது QR கோடு ஸ்கேன் செய்ய சொன்னால் அதனை தவிர்த்துவிட வேண்டும். லோன் ஆப் மூலம் கடன் வாங்க வேண்டாம். பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
வாட்ஸ்அப் குரூப்பிலோ, டெலிகிராமிலோ தொடர்பு கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவர்களின் பேச்சை நம்பி பணம் அனுப்பவோ, கிரிப்டோ கரன்சியாக மாற்றி அனுப்பவோ கூடாது. பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத, நன்றாக தெரியாத நபர்களின் பேச்சை கேட்டு பணம் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்கள் எவரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற Help line-க்கு போன் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் மற்றொரு சாத்தான்குளம் சம்பவம் - ஹென்றி திபேன் பேட்டி