ETV Bharat / city

அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கத் தடை கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு - மத்திய மாநில அரசு ஊழியர்கள்

சென்னை: ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களுக்கு கரோனா நிவாரண உதவி வழங்க தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jun 18, 2021, 3:05 PM IST

கரோனா பாதிப்பு, பொருளாதார இழப்புகள், இடர்கள் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4,000 ரூபாய் வீதம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், ஒன்றிய - மாநில அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கத் தடைவிதிக்கக் கோரி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், உணவுப் பொருள் வழங்கல் துறையின் புள்ளி விவரங்கள்படி, மொத்தம் இரண்டு கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்து வகையான பொருள்களும் பெறும் ஒரு கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 633 அட்டைகளும், 18 லட்சத்து 31 ஆயிரத்து 838 வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் குடும்ப அட்டைகளும், மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 626 சர்க்கரை குடும்ப அட்டைகளும், 53 ஆயிரத்து 864 எந்தப் பொருளும் வேண்டாம் என்று பெற்ற குடும்ப அட்டைகளும், 59 ஆயிரத்து 248 காவல் துறை குடும்ப அட்டைகளும் உள்ளன.

தற்போது அரிசி வாங்கும் குடும்ப அட்டை வைத்திருக்கும் இரண்டு கோடியே ஏழு லட்சத்து 87 ஆயிரத்து 950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அரிசி பெறும் அட்டைதாரர்களில் ஒன்றிய மாநில அரசு அலுவலர்கள், ஒன்றிய மாநில அரசு நிறுவனங்களான மின்சார வாரியம், பிஎஸ்என்எல் வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித் துறையினர், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரி-பள்ளிகள், இதர கல்வி நிறுவனங்கள், மேற்படி துறைகள், நிறுவனங்களில் பணி செய்து ஓய்வுபெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எவ்வித சம்பள குறைப்பும் இன்றி சம்பளம் வழங்கப்படுகிறது.

ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு சௌகரிய குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் வருமான இழப்பு இல்லை. அதனால், ஒன்றிய - மாநில அரசுத் துறைகள், பொதுப் பணித்துறை நிறுவனங்கள், வங்கிகள், ரயில்வே, பிஎஸ்என்எல், எண்ணெய் நிறுவனங்கள், காப்பீடு, அஞ்சல் துறை உள்பட அனைத்து வகையான ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு நிதி பெறும் கல்லூரி-பள்ளிகளில் பணிபுரிபவர்களுக்கும் இந்தத் துறைகள், நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் பயனாளிகளாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்க தடை விதிக்க வேண்டும் எனவும்,

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆர். சுப்பையா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முக சுந்தரம், நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுவுக்குப் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.