இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு வழங்கப்பட்டுள்ள 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்குள், வன்னியர்கள், சீர் மரபினர், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கி ஜூலை மாதம் சட்டம் இயற்றப்பட்டது.
அதனடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் சுழற்சி முறையைத் திருத்தி அமைக்க விரிவாக ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.
அந்த வகையில், சட்ட வல்லுநர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், சீர் மரபினருக்கு 7 விழுக்காடும், இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2.5 இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்தாண்டு முதல் தொழிற்கல்வி உள்ளிட்ட அனைத்துக் கல்விகளுக்குமான மாணவர் சேர்க்கையானது மேற்கூறிய சிறப்பு ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் நடைபெறும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் மைதிலி கே. ராஜேந்திரன் வெளியிட்டார்.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்