சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தினர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தென்னிந்திய புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த செயலாளர் முருகன், “ஜனவரி மாதம் நடைபெற இருந்த புத்தகக் கண்காட்சி கரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த புத்தகக் கண்காட்சியை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளோம்.
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வாசகர்களுக்குச் சென்றடையாமல் இருக்கின்றன. எனவே எங்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு புத்தகக் கண்காட்சியை நடத்த அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜனவரியில் ஜிஎஸ்டி உச்சம்; ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்