ETV Bharat / sports

சர்வதேச சிலம்பப் போட்டியில் தமிழக அணி சாம்பியன்! நாடு திரும்பிய சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு! - MALAYSIA SILAMBAM CHAMPIONSHIP

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Etv Bharat
Tamil Nadu Silambam Team (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 28, 2024, 1:00 PM IST

திருச்சி: உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் இந்தியா சார்பில் திருச்சியில் இருந்து 21 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். சிறப்பாக விளையாடிய வீரர் வீராங்கனைகள் 16 தங்கம், 10 வெள்ளி, எட்டு வெண்கல பதக்கங்களை குவித்ததுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தனர்.

பதக்கங்களை வென்று குவித்து நாடு திரும்பிய சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் திரளாக பங்கேற்று சால்வை மற்றும் மலர் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பினை அளித்தனர். ஏற்காடு, குண்டூர் கிராமத்தில் இருந்து மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மாணவி முதன் முறையாக சிலம்பம் விளையாடி 3 தங்கப் பதக்கம் வென்ற நிலையில் அவருக்கு பலரும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிலம்பக் குழுவினர், "தமிழக அரசு சிலம்பக் கலையை மேன்மேலும் வளர்த்திட வேண்டும், அதேநேரம் சிலம்ப போட்டியில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும், சர்வதேச அளவிலான போட்டிக்கு செல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் எந்த ஒரு உதவிகளும் வழங்கப்படவில்லை, மாறாக தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட உதவியைக் கொண்டு போட்டிகளில் பங்கேற்றதாகவும் இந்த நிலை மாற தமிழக அரசு உதவிட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்! அன்கேப்டு வீரரை அழைக்கும் ஆஸ்திரேலியா! புது திட்டமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.