ETV Bharat / state

இன்ஸ்பெக்டர் மீது பாட்டில் குண்டு வீச்சு.. நள்ளிரவில் போதை கும்பல் அதகளம்..! நெல்லை பரபரப்பு! - NELLAI CRIME

நெல்லையில் நள்ளிரவு குடித்துக் கொண்டிருந்தவர்களை எச்சரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது மது பாட்டிலில் தீ வைத்து வீசி தாக்க முயன்ற போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

ரவுடி அருணாச்சலம்
ரவுடி அருணாச்சலம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 1:01 PM IST

திருநெல்வேலி: நெல்லை டவுன் கூலக்கடை பஜாரை அடுத்த பழனி தெரு பகுதியில் நேற்று நள்ளிரவு ஒரு கும்பல் ஆட்டோவை நிறுத்தி அதில் மது குடித்தவாறு ரகளையில் ஈடுபட்டுள்ளது. இதனை பார்த்தவர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உயிர் தப்பிய இன்ஸ்பெக்டர்

தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளார். அங்கு பழனி தெருவை சேர்ந்த சந்தானம் மகன் அருணாச்சலம் (25) என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். உடனே இன்ஸ்பெக்டர், அவர்களை தகராறு செய்யாமல் வீட்டுக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இதை கேட்ட அருணாச்சலம் மற்றும் அவரது கூட்டாளிகள் இன்ஸ்பெக்டரை அவதூறாக பேசியுள்ளனர். இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது முகமது அலி தெருவை சேர்ந்த நாராயணன் மகன் இசக்கி என்ற ஏழரை (27) என்பவர் மதுபாட்டிலில் தீயை வைத்து இன்ஸ்பெக்டர் மீது வீசியுள்ளார்.

உடனே இன்ஸ்பெக்டர் விலகி கொண்டதால், பாட்டில் தரையில் விழுந்து வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதனால் இன்ஸ்பெக்டர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அவர் உடனடியாக மாநகர மேற்கு மண்டல துணை கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கவே ரோந்து வாகனத்தில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதை பார்த்த அருணாச்சலம் இன்ஸ்பெக்டரை தள்ளிவிட்டு தப்பிக்க முயற்சி செய்தார்.

இதையும் படிங்க: காதலியை 50 துண்டுகளாக வெட்டிய கறிக்கடை தொழிலாளி.. கொலைக்கு முன் பாலியல் வன்கொடுமை.. பதறும் க்ரைம் சீன்!

போலீசார் எச்சரித்தும் அதகளம்

இசக்கி என்ற ஏழரை ரோந்து வாகனத்தின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். தொடர்ந்து அருணாச்சலம் தனது நண்பர்களுக்கு போன் செய்யவும் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஓடி வந்துள்ளது. அதனால் பழனி தெரு கலவரக்காடாக மாறியது. இதனிடையே துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர். அதற்குள் கலவரத்தில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து ஆளுக்கொரு திசையில் தப்பியோடினர்.

போலீசாரின் பிடியில் பாளை பகுதியை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன்(27), அருணாச்சலத்தின் தந்தை சந்தானம் ஆகியோர் சிக்கினர். அவர்களை போலீசார் டவுன் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மேலும், பழனி தெருவில் உள்ள ஒரு சமுதாய மண்டபத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

விசாரணையில், அருணாச்சலத்தின் அக்கா மகள் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் மது விருந்து நடைபெற்றுள்ளது. அதில் போதை தலைக்கேறிய நிலையில் அருணாச்சலம் கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. அருணாச்சலம் மீது ஏற்கனவே வழக்கு உள்ள நிலையில், இசக்கி என்ற ஏழரை மீதும் டவுனில் குதிரையை வெட்டிக் கொன்ற வழக்கு உள்ளது. நெல்லை கூலக்கடை பஜாரில் நள்ளிரவு வரை பரோட்டா கடைகள் திறந்து வைத்து வியாபாரம் செய்து வருவதால் அங்கு மது குடித்துவிட்டு சாப்பிடுவதற்காக போதை கும்பல் சென்று வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, அங்கு உள்ள முக்கிய தெருக்களில் போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.