ETV Bharat / city

ஆக்கிரமிப்பு - கோவில் மண்டபத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவு! - mhc

பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ராமாபுரம் கலசத்தம்மன் கோவில் ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 9, 2021, 10:48 AM IST

சென்னை: ராமாபுரத்தில் உள்ள கலசத்தம்மன் கோவிலின் மண்டபம் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி, அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மாநகராட்சி ஆணையர், அப்பகுதி வட்டாட்சியர், கோவில் நிர்வாகத்தினர் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

சட்டம் ஒழுங்கு பிரச்னை

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை கோவில் நிர்வாகம் ஒப்புக் கொண்டாலும், சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஆக்கிரமிப்பை அகற்ற அலுவலர்கள் மறுத்துவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஆக்கிரமிப்புக்களை அகற்ற விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை மூன்று மாதங்களில் அகற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் நிவாரணத் தொகை - மாநில அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.