சென்னை: 2021 - 22 நிதியாண்டிற்கான சொத்து வரி செலுத்துவதற்கு இன்று (மார்ச் 31) கடைசி நாள் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரித்திருந்தது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பிரபல திரையரங்கான எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கின் நிர்வாகத்தினர் பல ஆண்டுகளாக சொத்து வரியையும் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வரி செலுத்தாத காரணத்தினால், திரையரங்குக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர். அதன்படி 51 லட்சத்து 22 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து வரியும், 14 லட்சம் கேளிக்கை வரியும் செலுத்தாமல் இருந்தது.
இதையடுத்து, நகராட்சி சட்டம் 1919-இன் படி ஜப்தி செய்ததாக சென்னை மாநகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஆல்பர்ட் திரையரங்கம் செலுத்தவேண்டிய நிலுவை தொகையை காசோலையாக செலுத்தியதால் சீலினை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதையும் படிங்க: 'அதிமுக அறிமுகப்படுத்திய தொழில் திட்டங்களில் மு.க. ஸ்டாலின் கையெழுத்திடுகிறார்'- எம்.சி. சம்பத்!