சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையகத்தில் தேர்தல் அறிக்கை இன்று (மார்ச் 19) வெளியிடப்பட்டது. மதுவிலக்கு, 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தல், போதைப் பொருட்கள் விழிப்புணர்வு , ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் , தொழிலாளர் நலன் , கல்வி, சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, முதலீட்டு நிறுவனங்களிடம் வேலைவாய்ப்புக்கான உத்தரவாதங்களை பெறுதல் உள்ளிட்டவை முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என குற்றஞ்சாட்டினார். திமுக தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, "ஒவ்வொன்றும் தனித்தனிக் கட்சிகள், நாங்கள் பொதுவான கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைந்துள்ளோம்" என்றார்.