ETV Bharat / city

துரைமுருகன் வீட்டில் திடீர் சோதனை - பின்னணி என்ன? - தேர்தல் 2019

வேலூர்: காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நள்ளிரவில் நடைபெற்ற திடீர் சோதனையின் பின்னணி பற்றி அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விதமான தகவல்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
author img

By

Published : Mar 30, 2019, 10:48 AM IST

திமுக பொருளாளர் துரைமுருகனின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகும். காட்பாடி காந்தி நகரில் அவரது வீடு அமைந்துள்ளது.

துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், திமுக சார்பில் போட்டியிடுகிறார். இதையடுத்து தனது மகனை ஆதரித்து துரைமுருகன் கடந்த ஒரு மாத காலமாக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி பரப்புரைக் கூட்டங்கள், வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் கலந்துகொண்டு தனது மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார். இதன் காரணமாக துரைமுருகனின் வீட்டில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (நேற்று) இரவு 9 மணியளவில் துரைமுருகன் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தேர்தல் பரப்புரை வேலையாக வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டினுள் வருமான வரித்துறை அதிகாரிகள் மனோஜ், முரளி, சதீஷ் ஆகியோர் இருந்ததைக்கண்டு, துரைமுருகன் நீங்கள் யார் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மூன்று பேரும் நாங்கள் வருமானவரித் துறையில் இருந்து வந்துள்ளோம், உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த துரைமுருகன், தேர்தல் நேரத்தில் எதற்காக சோதனை நடத்த வந்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கிடையே இந்த தகவலை கேள்விப்பட்டு ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் துரைமுருகன் இல்லத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நீடித்தது.

இதையடுத்து திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும், வழக்கறிஞருமான பரந்தாமன் சம்பவ இடத்துக்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் சட்டப்படி தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்த உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. முதலில் இங்கிருந்து புறப்படுமாறு தெரிவித்தார். இதனால் அதிகாரிகளுக்கும், திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்ததால், அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர். பின்னர் தகவலறிந்து வருமானவரித்துறை உதவி ஆணையர் விஜய் அங்கே வந்தார். அவரிடமும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர். இதனால் சோதனை நடத்த முடியாமல் அதிகாரிகள் வெளியே நின்றபடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்காக சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

வேலூர் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் காட்பாடி டிஎஸ்பி சங்கர் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். துரைமுருகன் வீட்டுக்கு வெளியே சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மற்றும் திமுக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் ஆகிய இருவரும் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் சட்டப்பிரிவு 131-ன் படி துரைமுருகன் வீட்டில் சோதனை மேற்கொள்ள வந்துள்ளதாகவும், அதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கூறினர்.

இதற்கு வழக்கறிஞர் பரந்தாமன், சட்டப்பிரிவு 131-ன் படி முறையாக சம்மன் அனுப்பி, உரிய கால அவகாசம் வழங்கிய பின்னர்தான் சோதனை நடத்த முடியும். ஆனால் நீங்கள் திடீரென்று இரவில் வந்து சோதனை நடத்த வேண்டும் என்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது. எனவே நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தார். இதனால் அதிகாரிகள் ஆறு மணி நேரம் அவர்கள் வீட்டுக்கு வெளியே நின்றபடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

இதனிடையே இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக நிர்வாகிகள், நாங்கள் சொல்லவேண்டியதை சொல்லி விட்டோம். இனிமேல் நீங்கள் வந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு என்று அதிகாரிகளிடம் எச்சரித்தபடி சென்றனர்.

பின்னர் போலீஸார் நடத்திய சமரசத்துக்கு பிறகு, சோதனைக்கு திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதையடுத்து நீண்ட தாமதத்துக்குப் பிறகு அதிகாலை 3 மணி அளவில் வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜய் தீபன் தலைமையில் துரைமுருகன் வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் வேறு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்றும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இந்த திடீர் சோதனை குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,

திமுகவின் முக்கிய நிர்வாகியான துரைமுருகன் தனது மகனை ஒரு தொகுதியில் வெற்றி பெறச் செய்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் சப்ளை செய்வதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாகவும் தகவல் கிடைத்தது. அத்துடன் துரைமுருகன் வீட்டில் இருந்துதான் இந்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே தேர்தல் விதிமுறைப்படி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவில் வருமானவரித்துறை அதிகாரிகள் இடம் பெறுவது வழக்கம். வேட்பாளர் தேர்தல் நேரத்தில் செய்யும் செலவுகளை அவர்கள் கண்காணிப்பார்கள். அந்த வகையில்தான் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையானது முடிந்த பிறகுதான் முழு விவரங்கள் தெரியவரும் என்றனர்.

இதுகுறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கூறுகையில்,

வருமானவரித்துறை அதிகாரிகள் சட்டப்படி சோதனை நடத்த வந்தால் நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம். ஆனால், அவர்கள் முறையான அனுமதி சான்று இல்லாமல் சோதனை நடத்த வந்துள்ளனர். அவர்கள் உண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள்தானா என்று எங்களுக்கு தெரியவில்லை. எனவே இது அரசியல் நோக்கத்துக்காக வேண்டுமென்றே நடத்தப்படும் நிகழ்வாகும் என தெரிவித்தார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

வருமான வரித்துறை சோதனையின் பின்னணி என்ன?

வேலூர் நாடளுமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர். திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ. சி. சண்முகம் போட்டியிடுகிறார். இரண்டு பேரும் அரசியல் மற்றும் பணம் செல்வாக்கில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது.

ஏ.சி. சண்முகம் ஏற்கனவே கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சத்து இருபதாயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என தீவிர தேர்தல் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது வேலூர் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

துரைமுருகனும் தனக்குப் பிறகு தனது மகனை அரசியல் வாரிசாக்க வேண்டும் என்ற வகையில், எப்படியாவது கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்ய பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதிமுகவை பொறுத்தவரை பாமக, தேமுதிக கூட்டணி பலமாக இருந்தாலும் கூட, பாஜகவும் கூட்டணியில் இருப்பதால் வாக்குகள் பெறுவதில் பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதாவது பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் கூட வாக்களிக்க மாட்டார்கள் என பேச்சுகள் நிலவுகிறது. அந்த வகையில் வேலூர் தொகுதியில் ஆம்பூர், வாணியம்பாடியில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதால், அதிமுகவை விடுத்து, இவர்கள் திமுக கூட்டணியை ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது

எனவே இதன் காரணமாக இந்த முறை ஏ.சி. சண்முகம் வெற்றி பெறுவது கடினமானது என தகவல்கள் உலா வருகின்றன. எனவே ஏ.சி. சண்முகத்தை வெற்றி பெற செய்ய, தமிழக அரசு பாஜக மூலம் இந்த வருமான வரித்துறை ரெய்டு திட்டத்தை செயல்படுத்துயுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் நடைபெறும் இந்த சோதனையானது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமையும் என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.

Intro:வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் அதிகாரிகள் திடீர் ரெய்டு

வாக்காளர்களுக்கு கட்டுக்கட்டாக பணம் சப்ளையா??? சோதனை நடத்த வடாமல் தொண்டர்கள்க

Body:திமுக பொருளாளர் துரைமுருகனின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி ஆகும். காட்பாடி காந்தி நகரில் துரைமுருகன் வீடு அமைந்துள்ளது. துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார் தனது மகனை ஆதரித்து துரைமுருகன் கடந்த ஒரு மாதங்களாக தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார் அதன்படி பிரச்சாரக் கூட்டங்கள் வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் கலந்துகொண்டு தனது மகன் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகிறார் இதன் காரணமாக துரைமுருகனின் வீட்டில் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர் இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் துரைமுருகன் வீட்டிற்கு ஐடி அதிகாரிகள் சோதனை நடத்த வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதாவது துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தேர்தல் பிரச்சார வேலையாக வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்தனர் அப்போது வீட்டினுள் அதிகாரிகள் மனோஜ், முரளி, சதீஷ் ஆகியோர் இருந்ததை கண்டு, துரைமுருகன் நீங்கள் யார் என கேட்டுள்ளார் அதற்கு அந்த மூன்று பேரும் நாங்கள் வருமானவரித் துறையில் இருந்து வந்துள்ளோம் உங்கள் வீட்டை சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளனர் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த துரைமுருகன் தேர்தல் நேரத்தில் எதற்காக சோதனை நடத்த வந்துள்ளீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் இதற்கிடையில் தகவல் கேள்விப்பட்டு ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் துரைமுருகன் இல்லத்தில் குவிந்தனர் இதனால் பரபரப்பு நீடித்தது திமுக சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது அவர் சட்டப்படி தேர்தல் நேரத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்த உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது முதலில் இங்க இருந்து கிளம்புங்க என தெரிவித்தார் இதனால் அதிகாரிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தொண்டர்கள் கூட்டம் அதிகரித்தததல் அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினர் பின்னர் தகவலறிந்து வருமானவரித்துறை உதவி ஆணையர் விஜய் த. அவரிடமும் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குவாதம் செய்தனர் இதனால் சோதனை பநடத்த முடியாமல் அதிகாரிகள் வெளியே நின்றபடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர் பாதுகாப்பிற்காக சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர் வேலூர் எஸ்பி பாலகிருஷ்ணன் மற்றும் காட்பாடி டிஎஸ்பி சங்கர் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் வீட்டிற்கு வெளியேயும் சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மற்றும் திமுக முன்னாள் எம்பி அப்துல் ரகுமான் ஆகிய 2 பேரும் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதற்கு அதிகாரிகள் சட்டப்பிரிவு 131 படி உங்கள் வீட்டில் சோதனை எடுத்து வந்துள்ளோம் ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கேட்டனர் அதற்கு வக்கீல் பரந்தாமன், சட்டப்பிரிவு 131 படி முறையாக சம்மன் அனுப்பி உரிய கால அவகாசம் வழங்கிய பின் தான் சோதனை நடத்த முடியும் ஆனால் நீங்கள் திடீரென்று இரவில் வந்து சோதனை நடத்த வேண்டும் என்பதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது எனவே நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என வாக்குவாதம் செய்தனர் இதனால் அதிகாரிகள் ஆறு மணி நேரம் அவர்கள் வீட்டிற்கு வெளியே நின்றபடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர் இதற்கிடையில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தொண்டர்கள் தலைமுறைகளுக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் மேலும் பரபரப்பு அதிகரித்தது அப்போது திமுக நிர்வாகிகள் அதிகாரிகளிடம் நாங்கள் சொல்லவேண்டியதை சொல்லி விட்டு இனிமேல் நீங்கள் வந்தால் இங்கே ஏதாவது சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் தான் முழுப் பொறுப்பு என்று எச்சரித்தபடி சென்றனர் பின்னர் போலீஸ் அதிகாரிகள் நடத்திய சமரசத்திற்கு பிறகு சோதனைக்கு திமுக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுத்தனர் இதையடுத்து நீண்ட தாமதத்திற்குப் பிறகு அதிகாலை 3 மணி அளவில் வருமான வரித்துறை உதவி ஆணையர் விஜய் தீபன் தலைமையில் அதிகாரிகள் துரைமுருகன் வீட்டுக்குள் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர் அப்போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்ததாக கூறப்படுகிறது மேலும் தேர்தல் நேரம் என்பதால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசுப் பொருட்கள் மற்றும் வேறு ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என அதிகாரிகள் சோதனையிட்டனர் இதுகுறித்து திடீர் சோதனை குறித்து அதிகாரி தரப்பில் கூறுகையில் திமுகவின் முக்கிய நிர்வாகியான துரைமுருகன் தனது மகனை ஒரு தொகுதியில் வெற்றி பெறச் செய்ததற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் சப்ளை செய்வதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது மேலும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதாகவும் தகவல் கிடைத்தது துரைமுருகன் வீட்டில் இருந்துதான் இந்த ஏற்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது எனவே தேர்தல் விதி முறைப்படி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழு அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர் அதாவது தேர்தல் செலவின பார்வையாளர்கள் குழுவில் வருமானவரித்துறை அதிகாரிகள் இடம் பெறுவது வழக்கம் வேட்பாளரின் செலவில் அவர்கள் கண்காணிப்பார்கள் அந்த வகையில்தான் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது முடிந்த பிறகுதான் முழு விவரங்கள் தெரியவரும் என்றனர் இதுகுறித்து திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் கூறுகையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சட்டப்படி சோதனை நடத்த வந்தால் நாங்கள் முழு அளவில் ஒத்துழைப்போம் ஆனால் அவர்கள் முறையான அனுமதி சான்று இல்லாமல் சோதனை நடத்தி வந்துள்ளனர் அவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று எங்களுக்கு தெரியவில்லை ஒருவேளை வருமானவரித்துறை அதிகம் இருந்தால் தற்போது அவர்கள் சோதனை நடத்த அதிகாரம் கிடையாது எனவே இது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும் என தெரிவித்தார்

Conclusion:ஐடி சோதனையின் பின்னணி என்ன?

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களும் நட்சத்திர வேட்பாளர்கள் ஆகியவர் அதாவது திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார் அதிமுக சார்பில் கூட்டணி கட்சியான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ. சி சண்முகம் போட்டியிடுகிறார் இரண்டு பேரும் அரசியல் மற்றும் பணம் செல்வாக்கில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது ஏ சி சண்முகம் ஏற்கனவே கடந்த முறை வேலூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சத்து இருபதாயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார் எனவே இந்த முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என ஏ.சி.சண்முகம் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார் அதேசமயம் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் ஏற்கனவே கடந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார் ஆனால் அப்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை தற்போது வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் துரைமுருகனும் தனக்குப் பிறகு தனது மகனை அரசியல் வாரிசாக வேண்டும் என்ற வகையில் எப்படியாவது மகனை வெற்றி பெற செய்ய பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார் அதிமுகவை பொறுத்தவரை பாமக தேமுதிக கூட்டணி பலமாக இருந்தாலும் கூட பாஜக அதிமுக கூட்டணி நிற்பதால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர் அதாவது தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது அந்த வகையில் வேலூர் தொகுதியில் ஆம்பூர் வாணியம்பாடியில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர் இவர்கள் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை திமுக கூட்டணியை ஆதரிப்பதாக கூறப்படுகிறது எனவே இதன் காரணமாக இந்த முறை இயேசு தன் முகம் வெற்றி பெறுவது கடினமான ஒரு சொல் என்றும் தெரிகிறது எனவே இயேசு சண்முகத்தை வெற்றி பெற செய்ய தமிழக அரசு பாஜக மூலம் இந்த ஐடி ரெய்டு திட்டத்தை வைத்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது தேர்தல் நேரத்தில் நடைபெற்றுவரும் செய்கிறார்கள் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.