சென்னை: தாம்பரம் கிஷ்கிந்தா செல்லும் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது. இவ்வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான 37 ஆர்,சி புத்தகங்கள் கடந்த மாதம் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் தலைமையிலான குழுவினர், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர்.
பின்னர், கவனக்குறைவாக பணி செய்ததாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலர்கள் 5 பேரை பணியிடம் நீக்கம் செய்து தென் சென்னை போக்குவரத்து இனை ஆணையர் உத்தரவிட்டார்.
இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தற்போது தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முக்கண்ணனை ஒழுங்கீனமான முறையில் பணியில் ஈடுபட்டதாக கூறி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், 37 ஆர்சி புத்தகங்கள் காணாமல் போன விவகாரத்தில் முக்கண்ணன் மீது சந்தேகம் உள்ளதால், முக்கண்ணன் சென்னையில்தான் தங்கி இருக்க வேண்டும் எனவும், வெளியே செல்லும்பொழுது உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும் எனவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் கொடுக்கப்பட்ட ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஆர்,டி,ஓ அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ’ஸ்டெர்லைட் ஆலை மூடியதால் தூத்துக்குடி துறைமுகம் பாதிப்பு..!’ - கப்பல் முகவர்கள் சங்கம்