ETV Bharat / city

தீபாவளிக்கு முன் பொருள்களை பெற முடியாதவர்கள் நவ. 8ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு - tamilnadu news

தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு ரேஷன் கடைகளில் பொருள்களை பெற முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்கு பின் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Oct 26, 2021, 12:53 PM IST

Updated : Oct 26, 2021, 2:24 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முன்பு நியாயவிலைக்கடை கடைகளில் பொருள்களைப் பெற முடியாதவர்கள் நவம்பர் 8ஆம் தேதிக்குப் பின் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், மாதத்தின் முதல் 3 நாள்கள் தங்கு தடையின்றி பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்யவும், அதே போல் கூடுதல் நேரம் கடைகள் இயங்கவும் ஏற்கனவே ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தீபாவளிக்கு முன்பு அத்தியாவசிய பொருள்களை வழங்குவதை நாளிதழ்கள் செய்தியாக விளம்பரப்படுத்த வேண்டும். சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கக் காவலர்கள் பணியமர்த்தி ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்குப் பொருள்கள் வழங்க வேண்டும்.

தீபாவளி முன்பு பொருள்களை வாங்க முடியாதவர்கள் பண்டிகை முடிந்து நவம்பர் (8) திங்கட்கிழமை முதல் பெற்றுக் கொள்ளலாம். மேற்காணும் பணிகளைக் கண்காணிக்க வட்ட அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

பணிகளைப் புகார்கள் இடமின்றி திறம்பட மேற்கொள்ள அறிவுறுத்தி சுற்றறிக்கையைக் கூட்டுறவுத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சிறையில் ஆர்யன் கான்.. கண்ணீரில் குடும்பம்.. இன்று பிணை கிடைக்குமா?

Last Updated : Oct 26, 2021, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.