இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கையில், “கரோனா தொற்று காரணமாக ஏப்ரல் மாதம் முதல் விலையில்லா பொருள்களை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜூலை மாதத்திற்கான ரேஷன் பொருள்களை, ஜூலை 1 முதல் 4 வரை குடும்ப அட்டைதாரர்கள் சிலர் பணம் கொடுத்து நியாய விலைக் கடைகளில் வாங்கிச் சென்றனர்.
ஜூலை மாதத்திற்கான அனைத்துப் பொருள்களும் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் காரணமாக, ஜூலை 1 முதல் 4 வரை சில அட்டைதாரர்கள் சிறப்பு அத்தியாவசியப் பொருள்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை பணம் செலுத்தி பெற்றுச் சென்றுள்ளதால், அவர்களுக்கு மட்டும் வரும் ஆகஸ்ட் 2020 மாதத்தில் உரிய நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
அதன்படி, ஜூலை மாதம் விலை செலுத்தி வாங்கிய பொருள்கள் அளவிற்கு ஆகஸ்ட் மாதம் விலையின்றி பொருள்கள் வழங்கப்பட வேண்டும்“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இலவச மாஸ்க் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு