மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கும் மேல் பெறுவோர், கான்கிரீட் வீட்டில் குடியிருப்பவர் உள்ளிட்டோருக்கு ரேஷன் கார்டில் பொருள்கள் வழங்கப்படாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்தத் தகவல் தொடர்பாக, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இன்று(அக்.13) விளக்கம் அளித்துள்ளது. அதில், தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடும் இன்றி பொருள்கள் வழங்கப்பட்டுவருகின்றன. இதில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. சமூக ஊடகங்களில் பரவிவரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் 1000 ரூபாய் வழங்கப்படும்!