பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர், அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்திற்கு இணையான அமைப்பாகும். அதன் இயக்குநராக தமிழாராய்ச்சியில் அனுபவம் மிக்க, தமிழறிஞர்களில் ஒருவரை நியமிப்பது தான் பொருத்தமாக இருக்கும். தற்போதைய நியமனம் தமிழாய்வு நிறுவனத்தை மேலும் முடக்குவதற்கு வழி வகுக்கும்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறைக் கைதிகளில் எத்தனை பேருக்கு கரோனா: அரசுக்கு உத்தரவு