ETV Bharat / city

'எழுவர் விடுதலையில் நீதிமன்றங்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும்' - 7 தமிழர்கள்

சென்னை: எழுவர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : Jul 23, 2020, 12:39 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக் காலத்தைக் கடந்தும் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் மாளிகை தேவையற்ற தாமதம் செய்வது குறித்து உயர் நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆளுநர் விரைந்து முடிவெடுக்காவிட்டால் உயர் நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென நீதிபதிகள் விடுத்துள்ள மெல்லிய எச்சரிக்கையை, ஆளுநர் மாளிகை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவர்களை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் உண்டு; அதுகுறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் செப்டம்பர் 9ஆம் தேதி கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றே ஆளுநருக்கும் அனுப்பிவைத்தது. ஆனால், இன்றுடன் 682 நாள்களாகிவிட்ட நிலையில், அதுகுறித்து இதுவரை ஆளுநர் முடிவெடுக்கவில்லை.

7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடிப்பது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அவர்களின் விடுதலைக்கான காரணங்களையும், அவற்றை அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளையும் தமிழ்நாடு அரசு தெளிவாகத் தெரிவித்திருக்கிறது.

அவற்றைப் படித்துப் பார்த்தால், இதில் ஒரு சில மணி நேரங்களில் முடிவெடுத்து விட முடியும். ஆனால், எழுவரும் தமிழர்கள் என்பதாலேயே, அவர்களின் விடுதலையை ஆளுநர் இவ்வாறு தாமதப்படுத்துகிறார். தெரிந்தே இதைச் செய்துவிட்டு, முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்ற காரணத்திற்குள் ஆளுநர் ஒளிந்துகொள்கிறார். அதைத் தான் உயர் நீதிமன்றம் இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.

7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரவில்லை. 30 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்க்கையில் பெரும் பகுதியைச் சிறைகளிலேயே இழந்துவிட்ட அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது; தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது. இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் ஆளுநர் முடிவெடுக்க தாமதித்தால், அதன் பின்னணியில் ஆளுநருக்கு ஏதோ செயல் திட்டம் உள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

7 தமிழர்கள் விடுதலை குறித்து உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன்மூலம் ஆளுநர் பதவி மீது அரசியல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மறுகூட்டல் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் - தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.