ETV Bharat / city

'இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிடவும்'

கரோனா நோயாளிகளின் இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 4, 2021, 11:38 AM IST

ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
Ramadoss ask exact cause must be stated in death certificate of corona patients

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 4) வெளியிட்டுள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தாக்கி உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் இறப்புக்கான காரணம் சரியாகக் குறிப்பிடப்படாததால், அவர்களின் குடும்பங்கள் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளாகின்றன. கரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் உதவிகளை பெற்றுத் தருவதற்கான ஆவணத்தைத் தயாரிப்பதில் காட்டப்படும் அலட்சியம் அல்லது தவறு கண்டிக்கத்தக்கது.

கரோனாதான் காரணம்

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தாக்குதலின் முதல், இரண்டாவது அலைகளில் நேற்று (ஜூன் 3) வரை 25,665 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றாலும் கூட இது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை ஆகும்.

இவர்கள் அனைவரும் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று தமிழ்நாடு அரசே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. ஆனால், அவ்வாறு உயிரிழந்தவர்களுக்காக வழங்கப்படும் இறப்புச் சான்றிதழ்களில் பலர் நிமோனியா, மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது தவறு.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நேரங்களில் நிமோனியா, சிறுநீரகப் பாதிப்பு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது உண்டு. ஆனால், அவர்களின் இறப்புக்கு அந்த நோய்கள் காரணமல்ல. கரோனா தொற்று ஏற்பட்டதன் பின்விளைவாகத்தான் அவர்களுக்கு பிற நோய்கள் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அதனால் அவர்கள் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாகத்தான் கருதப்பட வேண்டும். மாறாக பிற நோய்களால் அவர்கள் உயிரிழந்து விட்டதாகச் சான்றளிப்பதை ஏற்க முடியாது.

வாடும் குடும்பத்தினர்

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்கு வழியில்லாமல் தவிக்கின்றன. சில இடங்களில் தாய், தந்தை என இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகள் ஆதரவற்றவர்களாகிவிட்டனர்.

அவர்களின் எதிர்காலத்திற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசும், அந்தக் குழந்தைகளின் 23ஆவது வயதில் ரூ.10 லட்சம் கிடைக்கும் வகையில் வைப்பீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசும் அறிவித்துள்ளன.

இவை தவிர மாத நிதியுதவி, கல்வி உதவி உள்ளிட்ட மேலும் பல உதவிகளும் ஒன்றிய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்துள்ள இத்தகைய உதவிகளை கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் பெற வேண்டுமானால், அவர்கள் கரோனா தாக்குதலில்தான் உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிமோனியா காய்ச்சல், மாரடைப்பு போன்ற காரணங்களால் உயிரிழந்ததாகச் சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பதால் அவர்களின் குடும்பத்தினரால் ஒன்றிய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை பெற முடியாது.

சாதகங்கள் சீர்குலையும்

கரோனா தாக்குதலால் பல குடும்பங்கள் குடும்பத் தலைவரை இழந்துள்ளன. சில குடும்பங்கள் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி ஆகிய இருவரையும் இழந்துள்ளன. வருவாய் ஈட்டும் உறுப்பினர்கள் இல்லாமல் ஒரு குடும்பம் இயங்குவது எவ்வளவு சிரமம் என்பதை அனைவரும் அறிவார்கள். அத்தகைய குடும்பங்கள் குறைந்தபட்ச தேவைகளுடன் இயங்குவதற்கு அரசின் உதவி தேவை. அதை உணர்ந்து தான் ஒன்றிய, மாநில அரசுகள் சில உதவிகளை அறிவித்துள்ளன.

அந்த உதவிகள் போதுமானவை இல்லை என்றாலும் கூட, தேவைகளை ஓரளவு நிறைவேற்றுவதற்கு துணை நிற்கக்கூடியவையாகும். ஆனால், அதைக் கூட பெற முடியாத அளவுக்கு இறப்புச் சான்றிதழில் தவறான காரணங்களை குறிப்பிடுவது ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் சாதகமான அனைத்து நடவடிக்கைகளையும் சீர்குலைப்பதாகும்.

புதிய இறப்புச் சான்றிதழ்

எனவே, தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களில் இறப்புக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குறித்து அரசு ஆய்வு செய்யவேண்டும். கரோனாவால் உயிரிழந்தவர்கள் வேறு காரணங்களால் இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அதைத் திருத்தி, கரோனாவால் உயிரிழந்ததாகப் புதிய இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதன்மூலம் கரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா: ஒரேநாளில் 2 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.