ETV Bharat / city

'எழுவர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்புக' - ராமதாஸ்

உச்ச நீதிமன்றத்தின் புதிய வழிகாட்டுதலின்படி, ஏழு தமிழர் விடுதலைக்கு புதிய பரிந்துரையை ஆளுநருக்கு அரசு அனுப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Ramadoss
ராமதாஸ்
author img

By

Published : Aug 6, 2021, 3:31 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், 14 ஆண்டுகள் தண்டனைக் காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், மாநில அமைச்சரவையின் பரிந்துரைப்படி அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பான சிக்கலில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும்.

விடுதலை

ஹரியானாவைச் சேர்ந்த வாழ்நாள் சிறைத் தண்டனை கைதி ஒருவரை, குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432 முதல் 435 வரையிலான பிரிவுகள் சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு கைதிகளின் தண்டனைக் காலத்தை குறைக்க வகை செய்கின்றன.

அந்தப் பிரிவுகளின்படி செய்ய முடியாத தண்டனைக் குறைப்பைகூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி, மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று செய்வதற்கு ஆளுநர்களுக்கு அதிகாரம் உண்டு என்பது தான் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மையக்கரு ஆகும்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வதற்காக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரை மீது முடிவெடுக்க முடியவில்லை என்று கூறி, அதை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தப் புதிய வழிகாட்டுதல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

ஆளுநர் அதிகாரம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்டு 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி விடுதலை செய்ய மாநில ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனடிப்படையில் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யும்படி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் இன்று வரை 1,063 நாள்ள் ஆகியும் ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டல்

மாறாக, இச்சிக்கலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆளுநர் ஒதுங்கிக் கொண்டார். ஏழு தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் இது தவறு என்பதைத் தான் உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஏழு தமிழர்கள் விடுதலை குறித்த தமிழ்நாட்டு அமைச்சரவையின் பரிந்துரையும் 161ஆவது பிரிவின்படி தான் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 161ஆவது பிரிவு என்பது முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகாரம் சம்பந்தப்பட்டது.

அவ்வாறு இருக்கும்போது இவர்கள் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுத்திருக்க வேண்டும். அதை விடுத்து குடியரசுத் தலைவர் முடிவுக்கு அனுப்பிவைத்தது சரியல்ல. ஏழு தமிழர் விடுதலை குறித்த தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மீது ஆளுநர் எப்போது முடிவெடுப்பார் என்பது எவருக்குமே விடை தெரியாத வினா ஆகும்.

எழுவர் விடுதலை

அதனால் இவர்கள் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுப்பது எந்த வகையிலும் பயனளிக்காது. அது விடுதலையை இன்னும் தாமதப்படுத்தவே செய்யும். கைதிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ள நிலையில், இவர்கள் விடுதலைக்காக ஆளுநரை மீண்டும் வலியுறுத்துவதே சாதகமானத் தீர்வாகும்.

எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை உடனடியாகக் கூடி ஏழு தமிழர்களை விடுதலை செய்யும்படி பரிந்துரை தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி, அழுத்தம் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்'’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: எழுவர் விடுதலையில் அரசு எப்போது முடிவு எடுக்கும் - அமைச்சர் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.