சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர், தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதில், "சுவாசப் பாதை தொற்று, காய்ச்சல் சிகிச்சை காரணமாக கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசனை(Rajini calls on Kamal) செல்போனில் அழைத்து நலம் விசாரித்தார்.
இந்த உரையாடல் 15 நிமிடம் நீடித்தது. மேலும், கமல்ஹாசன் உடல்நிலை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் தொகுத்து (biggboss anchor) வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நடந்தவை, நடப்பவையை கூறினார் - உலக நாயகனை விசாரித்த வைரமுத்து