இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்னும் புதிய கட்சியை நடிகர் ரஜினி தொடங்காத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன மூர்த்தி தொடங்கினார். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி ரஜினி மக்கள் மன்றத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி நியமிக்கப்பட்டிருந்த வேளையில், அரசியலில் இருந்து பின்வாங்குவதாக ரஜினி அறிவித்தார். ஆதலால் அர்ஜுன மூர்த்தி புதுக்கட்சி தொடங்கபோவதாக செய்தி வெளியாகியது.
இந்நிலையில் இன்று (பிப்.27) புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ள அர்ஜுன மூர்த்திக்கு ரஜினி அறிக்கை மூலம் வாழ்த்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மிசா முதல் திமுக தலைவர் வரை...!