சென்னை: ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி புதிய கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ராஜா முத்தையா மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, ஜனவரி 28ஆம் தேதி உயர் கல்வித்துறை வசம் இருந்த கல்லூரி மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும், கட்டணக் குறைப்புத் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் அரசாணையில் இல்லாமல் இருந்ததால் மாணவர்கள் போராட்டத்தைத் தற்போது வரை தொடர்ந்து வந்தனர். இதையடுத்து, தற்போது, பிற அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்கள் அளவிற்கு குறைத்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கட்டண விவரம்:
வ.எண் | படிப்புகள் | கல்விக் கட்டணம் |
1 | எம்.பி.பி.எஸ் | பயிற்சி கட்டணம்: ரூ.4,000 சிறப்பு கட்டணம்: ரூ.950 வைப்புத்தொகை : ரூ.1,000 நூலக கட்டணம்: ரூ.1,000 பல்கலைக்கழக கட்டணம்: ரூ.6,060 காப்பீடு: ரூ.300 செஞ்சிலுவை: ரூ.100 இதர கட்டணம்: ரூ.100 கொடி நாள்: ரூ.100 மொத்தம்: ரூ.13,610 |
2 | பி.டி.எஸ் | பயிற்சி கட்டணம்: ரூ.2,000 சிறப்பு கட்டணம்: ரூ.950 எச்சரிக்கை வைப்பு: ரூ.1,000 நூலக கட்டணம்: ரூ.1,000 பல்கலைக்கழக கட்டணம்: ரூ.6,060 காப்பீடு: ரூ.300 செஞ்சிலுவை: ரூ.100 இதர கட்டணம்: ரூ.100 கொடி நாள்: ரூ.100 மொத்தம்: ரூ.11,610 |
3 | முதுகலை (எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ்) | பயிற்சி கட்டணம்: ரூ.30,000 |
4 | முதுகலை பட்டயப்படிப்பு(டிப்ளமோ) | பயிற்சி கட்டணம்: ரூ.20,000 |
5 | பி.எஸ்சி (செவிலியர்), பிபிடி, பிஓடி | பயிற்சி கட்டணம்: ரூ.3,000 |
6 | எம்.எஸ்சி (செவிலியர்) | பயிற்சி கட்டணம்: ரூ.5,000 |
7 | எம்.பி.டி | பின்னர் அறிவிக்கப்படும் |