சென்னை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஜூன் 9) ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஜூன் 10, 11,12ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வெப்பநிலை குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா - கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 12ஆம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ.30.13 லட்சம் தங்கம், எலக்ட்ரானிக் பொருள்கள் கடத்தல் - விமான பயணி கைது