ETV Bharat / city

இந்தியாவிலேயே முதன்முறை: தமிழ்நாட்டில் "மோச்சா பாதுகாப்பு கேடயம்" - துப்பாக்கி தாக்குதலை சமாளிக்க மோச்சா பாதுகாப்பு கவசம்

துப்பாக்கி தாக்குதலின் போது குண்டு துளைக்காமல் இருக்க, "மோச்சா பாதுகாப்பு கேடயம்" சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

Railway
Railway
author img

By

Published : Apr 8, 2022, 2:06 PM IST

ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள் உள்ளிட்டோரின் துப்பாக்கி தாக்குதலை சமாளிக்க, பெரும்பாலும் மணல் மூட்டைகளையே ரயில்வே போலீசார் பயன்படுத்துகின்றனர். மணல் மூட்டைகளை அடுக்கி, அதற்கு பின் மறைந்திருந்து துப்பாக்கி தாக்குதலை சமாளிக்கும்போது, போலீசார் மீது குண்டு துளைக்க வாய்ப்புள்ளது. அந்த வேளையில் பொதுமக்களை காக்க முடியாத நிலையும் ஏற்படலாம்.

இதற்காக இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், மோச்சா என்னும் பெயரில் பாதுகாப்பு கேடயங்களை உருவாக்கியுள்ளனர். இந்த மோச்சா பாதுகாப்பு கேடயத்தின் ஒத்திகை நிகழ்ச்சி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று (ஏப்.7) நடத்தப்பட்டது. சுமார் 5 அடி உயரம் கொண்ட மணல் நிரப்பப்பட்ட பிளைவுட் பலகையால் தயாரிக்கப்பட்ட இந்த கேடயம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோச்சா கேடயங்களை ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கும் வழங்கப்படும், ரயில்வே போலீசார் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேர்வில் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.