ETV Bharat / city

பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை - பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - மு.க.ஸ்டாலின் கட்டளை

put an end to banner culture said tamilnadu chief minister mk stalin

author img

By

Published : Aug 23, 2021, 5:43 PM IST

Updated : Aug 23, 2021, 8:24 PM IST

17:39 August 23

பொதுமக்களுக்கு இடையூறாகப் பேனர் வைக்கக்கூடாது; வரவேற்பு வளைவுகள் வைக்கக்கூடாது என்ற தனது வேண்டுகோளை திமுகவினர் கட்டளையாக ஏற்று செயல்படுத்த வேண்டும் என திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  'திமுகவினர் நிகழ்ச்சிகளுக்காகப் பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதைத் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம் வயதான தினேஷ் மரணம் அடைந்திருப்பது எனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேனர் கலாசாரம் விரும்பத்தகாத செயல்

பேனர் கலாசாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும் இதுபோன்ற விரும்பத்தகாத - கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டுகோளை கட்டளை ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும்

திமுகவினர் என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன்.

13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணைநிற்கிறேன்.

இனி, இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்' என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படிங்க: காணாமல் போன 4 வயது சிறுவன்... வாட்ஸ்அப் குழு மூலம் 5 மணி நேரத்தில் கண்டுபிடித்த காவல்துறை

Last Updated : Aug 23, 2021, 8:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.