ETV Bharat / city

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் மனைவி ராணுவத்தில் இணைந்தார்! - புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால்

சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியாலின் மனைவி நிகிதா தெளண்டியால் இன்று (மே 29) சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் தனது பயிற்சியை நிறைவு செய்து பதக்கங்களைப் பெற்றார்.

pulwama matryr wife joins army, pulwama matryr Major Vibhuti Shankar Dhoundiyal, Major Vibhuti Shankar Dhoundiyal, மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால், மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால் மனைவி நிகிதா தெளண்டியால், நிகிதா தெளண்டியால், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால், சென்னை ராணுவ பயிற்சி மையம்
pulwama-matryr-wife-joins-army
author img

By

Published : May 29, 2021, 9:22 PM IST

சென்னையில் உள்ள ராணுவப் பயிற்சி மையத்தில் இன்று 167 ஆண் வீரர்களும், 31 பெண் வீராங்களைகளும் தங்களது 11 மாத பயிற்சியை நிறைவு செய்து இறுதி அணிவகுப்பை நடத்தினர். இதில், கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் உயிரிழந்த 40 வீரர்களின் ஒருவரான ராணுவ மேஜர் விபூதி ஷங்கரின் மனைவி நிகிதாவும் ஒருவர்.

தீவிரவாதிகள் தாக்குதலால் தனது கணவனை இழந்தாலும், தொடர்ந்து விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் பயிற்சி பெற்று ராணவ வீராங்கனையாக தேர்வாகியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தின் வடக்கு மண்டல கமான்டர் ஒய்.கே. ஜோஷியிடம் தனது பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

pulwama matryr wife joins army, pulwama matryr Major Vibhuti Shankar Dhoundiyal, Major Vibhuti Shankar Dhoundiyal, மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால், மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால் மனைவி நிகிதா தெளண்டியால், நிகிதா தெளண்டியால், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த மேஜர் விபூதி ஷங்கர் தெளண்டியால், சென்னை ராணுவ பயிற்சி மையம்
பயிற்சி வீரர், வீராங்கணைகளின் இறுதி அணிவகுப்பு

இது தொடர்பாக, நிகிதா பேசுகையில், "ராணுவத்தில் பயிற்சி பெற்றது சிறப்பான அனுபவமாக இருந்தது. எனது பயணம் தற்போதுதான் தொடங்கியுள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த எனது தாய், மாமியார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அவர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. எனது கணவர் உயிரிழந்தபோது கடினமாக இருந்தது. தற்போது, அவரைப் போன்ற ஒரு பெரும் பயணத்தை நான் மேற்கொள்கிறேன். அவர் என்னுடன் இருப்பது போன்று, என் கையை கோர்த்து உடன் வருவது போன்று உணர்கிறேன்.

நிகிதா தெளண்டியால் காணொலி

நாட்டில் உள்ள பெண்களுக்கு நான் கூற விரும்புவதெல்லாம் ஒன்று மட்டுமே. சில நேரங்களில் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். சில விஷயங்கள் நினைத்ததைப் போல நடைபெறாது. உங்களுக்கு நெருக்கமானதை இழக்க நேரிடலாம், அதுபோன்ற சூழல்களில் உடைந்து விடாதீர்கள். எழுந்து போரிடுங்கள். உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்" என்றார்.

பயிற்சியை முடித்த குதுகலத்தில் வீரர்கள்

இன்று நடந்த இந்நிகழ்வில் பூட்டான் மலை ராஜ்ஜியப் பிரிவைச் சேர்ந்த வீரர், வீராங்களைகளும் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இதையும் படிங்க: திமுக எம்.பி. ஆ. ராசாவின் மனைவி காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.