ETV Bharat / city

’தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக’ - புதுச்சேரி அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்! - புதுச்சேரி அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி அதிமுக
புதுச்சேரி அதிமுக
author img

By

Published : Jul 28, 2021, 4:51 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத, திமுக அரசைக் கண்டித்து கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று (ஜூலை.28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அன்பழகன் பேசுகையில், “தமிழ்நாட்டில் தேர்தல் நேரத்தில் 500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சியில் அமர்ந்தது. ஆனால், பதவியேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகியும், தேர்தல் கால அறிவிப்பில் ஒன்றைக் கூட செயல்படுத்தவில்லை.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் கண்டனம்

நீட் தேர்வு ரத்து, பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய், டீசலுக்கு நான்கு ரூபாய் விலை குறைப்பு, தடையில்லா மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தல், சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் குறைப்பு, விவசாய மக்களுக்கான எண்ணற்ற வாக்குறுதிகள் என அளித்த வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்ற முற்படவில்லை.

தமிழ்நாட்டை அனைத்து விதங்களிலும் இருட்டிற்கு அழைத்துச் செல்கிறது திமுக. தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகளின் உயிர்மூச்சாக உள்ள காவிரி நீர் பெறும் விஷயத்தில், கர்நாடகத்தில் கட்டப்படும் மேகதாது அணையை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த திமுக அரசு எந்த செயலையும் செய்யவில்லை.

இதனால் ஒட்டுமொத்தமாக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து, தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றாத திமுகவை கண்டிக்கிறோம்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் ராஜாராமன், புதுச்சேரி மாநில கழக இணைச் செயலாளர் கணேசன், அன்பானந்தம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.