ETV Bharat / city

பத்திரப்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Publication of bond registration guidelines

போலி ஆவணப்பதிவினை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பத்திரப்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பத்திரப்பதிவு
பத்திரப்பதிவு
author img

By

Published : Aug 5, 2021, 12:21 PM IST

போலி ஆவணப்பதிவினை தடுத்தல் - வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சரின் அறிவுரையின்படி, ஆவணத்தை எழுதிய ஆவண எழுத்தர் வழக்கறிஞரின் புகைப்படத்தின் நிழல் பிம்பம் ஆவணத்தின் அச்சுப்பிரதியில் வரும் வண்ணம் ஆவணம் அச்சுப்பிரதி எடுத்தல் - புதிய நடைமுறை கொண்டுவருதல் தொடர்பாக பத்திரப்பதிவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

  1. பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கைகள் எண். 22154/21/2006, நாள் 2006 ஜூன் 28, 29 மற்றும் பதிவுச் சட்டப் பிரிவு 32 - A பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை எண். 44377 / 21 / 2016, நாள் 2016 டிசம்பர் 8. பார்வை: | 2 . 1 1 போலி ஆவணப் பதிவுகளைத் தடுக்கும் நோக்கில் பார்வை (1)இல் காணும் ஆணை மூலம் கிரைய ஆவணங்களைப் பொறுத்து எழுதி கொடுப்பவர், எழுதி பெறுபவர் புகைப்படம், இடது பெருவிரல் கைரேகையினைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டதோடு இதர வகை ஆவணங்களைப் (அடைமானம், குத்தகை, ஏற்பாடு, தானம், உயில், அதிகார ஆவணம் முதலியன) பொறுத்து அவ்வாவணத்தைப் பதிவுக்குத் தாக்கல்செய்பவரின் புகைப்படம், கைரேகை பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டது.
  2. பார்வை 2இல் காணும் ஆணையில் ஆவணத்தினை எழுதி கொடுத்தவரை அடையாளம் காட்டும் சாட்சிய நபரின் (Identifying witness) பெயர், தந்தை பெயர், முகவரி ஆகிய கூடுதல் விவரங்களைப் பதிவுச் சட்டம் பிரிவு 2 (1) மற்றும் பதிவு விதி B2 (ii) & (ii) ஆகியவற்றிற்கு ஏற்ப ஆவண மேலெழுத்துகளில் தெளிவாக எழுதப்பட வேண்டும் எனவும், அச்சாட்சிய நபரின் அடையாள அட்டை ஒளிவருடல் செய்யப்பட வேண்டும் எனப் பதிவு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
  3. பதிவுச் சட்டத்தில் மேற்கண்டவாறு திருத்தம் செய்த பின்பும் ஆள் மாறாட்டம் மூலம் ஆவணப்பதிவு, ஒரே சொத்தினை இரு நபர்களுக்கு எழுதிக் கொடுத்தல், முதலமைச்சர் பொது அதிகாரத்தை ரத்துசெய்த பின் முகவரால் ஆவணம் எழுதித் தரப்படுதல், போலியாக முன் ஆவணம், பட்டா, வாரிசுரிமைச் சான்று முதலியவற்றைத் தயாரித்து ஆவணம் எழுதித் தருதல், ஒரு சொத்தானது வங்கியில் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலையில் SARFAESI சட்டத்தின்கீழ் நடவடிக்கை உள்ள நிலையில் அதை மறைத்து சொத்தை எழுதித் தருதல், சொத்தின் உரிமையாளருக்குப் பாத்தியப்பட்ட பரப்பைவிட அதிக பரப்பை எழுதித் தருதல், உரிமையியல் நீதிமன்றத்தால் சொத்தானது வேறு ஒருவருக்குப் பாத்தியப்பட்டது எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தவறான நபர் எழுதித் தருதல், தனக்கு உரிய பங்கினைவிட அதிகப்பங்கு விகிதத்தை எழுதித் தருதல், உண்மையான மற்ற வாரிசுகளை மறைத்துவிட்டு ஓரிரு வாரிசுகள் மட்டும் முழு சொத்தையும் எழுதித் தருதல் போன்ற தவறுகள் இன்னும் நடக்கின்றன.
  4. தமிழ்நாடு ஆவண எழுத்தர் உரிமம் விதிகள் 1982 விதி 2 (d)இல் ஆவண எழுத்தர் என்பவர் சொத்தின் உரிமை குறித்தும் விசாரித்து எழுத வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களால் ஆவணம் தயாரிக்கப்படும்போதும் அவர்களால் சொத்தின் உரிமை குறித்தும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்பே ஒரு ஆவணம் ஆனது தயார் செய்யப்படுகிறது. மேற்குறிப்பிடும் உரிம விதி 31இன்படி ஆவணத்தைத் தயாரித்த ஆவண எழுத்தரால் அவரின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை ஆவணத்தின் இறுதிப்பக்கத்தில் எழுதி அதன் அருகில் அவரால் கையொப்பம் செய்யப்படுகிறது. வழக்கறிஞர்களாலும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.
  5. போலியான ஆவணங்களிலும் ஆவணத்தைத் தயாரித்தவர் என்ற இடத்தில் ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞர் கையொப்பம் இருந்தாலும் அவை போலியாக இடப்பட்டுள்ள விவரம் நிறைய விசாரணையில் தெரியவருகின்றது. ஆவணத்தை எழுதியவர் யார் என்ற விவரம் இவ்வகையான ஆவணங்களில் அறிய இயலா நிலை உள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பதிவுத் துறையின் செயல்பாடுகள் குறித்து சீராய்வு செய்த கூட்டங்களில் இவ்விவரம் குறித்து விவாதிக்கப்பட்டு இக்குறைபாட்டை சரிசெய்ய அவர்களால், ஆவணம் தயார் செய்யும் நபர்களின் புகைப்படத்தையும் அவரால் கையொப்பம் செய்யும் இடத்தில் ஒட்ட அறிவுரை வழங்கப்பட்டது. இதனால் மாவட்ட பதிவாளர்கள் பதிவுத் துறைத் தலைவர் சுற்றறிக்கை எண். 41530/41/2017, நாள் 2017 நவம்பர் 8இல் தெரிவித்துள்ளபடி பதிவுச்சட்டம் பிரிவு 68 (2)இன்கீழ் விசாரணை செய்து ஒரு ஆவணத்தை போலி ஆவணம் என முடிவு செய்யும்போது அதனை எழுதித் தந்தவர் யார் என்ற விவரத்தைச் சரியாக அறிய முடியும். தந்தவருக்கும் இந்தப் போலி ஆவணம் தயாரிப்பில் ஏதாவது தொடர்பு இருப்பின் அவர்கள் மீதும் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள இயலும்.
  6. ஆகவே இதனைச் செயல்படுத்தும் பொருட்டு பின்வருமாறு நடைமுறை வகுத்து உத்தரவிடப்படுகிறது. (1) ஆவணத்தின் இறுதிப் பக்கத்தில் ஆவணத்தைத் தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரின் பெயர், ஆவண எழுத்தர் / வழக்கறிஞர் உரிமம் எண் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதனருகில் அவரின் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவிலான புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட பிம்பம் அதிலேயே அச்சுப்பிரதியில் வரும் வண்ணம் அச்சுப்பிரதி எடுத்து அதன் அருகில் அவர்களின் கையொப்பம் இடவேண்டும், (1) ஆவணம் எழுதிக் கொடுப்பவரால் பதிவுத் துறையின் இணையதளத்தில் உள்ள வசதியைப் பயன்படுத்தியோ அல்லது இணையதளத்தில் உள்ள வரைவு ஆவணங்களைப் பயன்படுத்தியோ ஆவணம் தயாரிக்கும் நிலையில் அவர் அவரின் புகைப்படத்தையும் தயாரித்தவர் என்று கையொப்பம் செய்யுமிடத்தில் அச்சுப் பிரதியில் வரும் வகையில் அச்சுப்பிரதி எடுக்க வேண்டும் இணையதளத்தில் உள்ள வசதியைப் பயன்படுத்தாமல் சொந்தமாக வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டால் அது கண்டிப்பாக ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரால் மட்டுமே கையொப்பம் இடப்பட்டு இருக்க வேண்டும், (M) ஆவண எழுத்தர் அல்லது வழக்கறிஞரால் அச்சுப்பிரதி எடுக்கப்பட்ட புகைப்படம் அவருடையது இல்லை எனச் சந்தேகம் வரும் நிலையில் அந்த ஆவண எழுத்தரை அல்லது வழக்கறிஞரை அலுவலகத்திற்கு அழைத்து அவரை விசாரித்து அவருடைய புகைப்படம்தான் என உறுதிசெய்து பின்பே ஆவணப் பதிவை மேற்கொள்ள சார்பதிவாளர்கள் கோரப்படுகின்றனர். இந்த நடைமுறை 2021 ஆகஸ்ட் 9 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதனைத் தவறாது கடைப்பிடித்திட அனைத்துப் பதிவு அலுவலர்களும் கோரப்படுகின்றனர்.
  7. சார்பதிவாளர்கள் இம்முறையைச் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என மாவட்ட பதிவாளர்களும், பதிவுத் துறைத் துணைத் தலைவர்களும் உறுதிசெய்ய கோரப்படுகிறார்கள், மேலும் இந்தச் சுற்றறிக்கை பெற்றதற்கான ஒப்புதலை அனைத்து சார்பதிவாளர்களிடமிருந்தும் மாவட்ட பதிவாளர்களும் மாவட்ட பதிவாளர்களிடமிருந்து பதிவுத் துறைத் துணைத் தலைவர்களும் பெற்று கோர்வை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பதிவுத் துறைத் துணைத் தலைவர்கள் தங்களின் ஒப்புதலை பதிவுத் துறைத் தலைவருக்கு அனுப்ப கோரப்படுகின்றனர்.

இதையும் படிங்க: ஒலிம்பிக் 1928 டு டோக்கியோ 2020: இந்திய ஹாக்கி ஆண்கள் அணி கடந்துவந்த பாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.