சென்னை மக்களின் நீர் ஆதாரமாக இருந்துவரும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க அணையின் குறுக்கே மொத்தம் 16 ஷட்டர்கள் உள்ளன.
இவற்றில் எட்டு, ஒன்பதாவது கதவுகள் பழுது ஏற்பட்டிருந்த நிலையில், அதை சரிசெய்யும் பணியை பொதுப்பணித்துறையினர் இன்று (ஜூன்.15) மேற்கொண்டனர். பழுதடைந்த எட்டு, ஒன்பதாவது கதவுகளை லிப்ட் உதவியுடன் அகற்றி புதிய கதவை நிறுத்தினர்.
வரும் நாள்களில் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் வருகை காரணமாகவும், மழைக்காலங்கள் தொடங்க உள்ளதாலும் முன்கூட்டியே ஷட்டர் பழுது பார்க்கும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டுள்ளனர்.