ETV Bharat / city

ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை தொடக்கம்

author img

By

Published : Jun 21, 2021, 8:12 AM IST

Updated : Jun 21, 2021, 8:26 AM IST

புதிய தளர்வுகளின்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை இன்று தொடங்கியது.

ஒரு மாதத்திற்கு பின்னர் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக மேலும் ஒரு வார காலத்திற்குத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளதால் இன்று முதல் புதிய தளர்வுகள் அமலில் வருகிறது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து சேவை தொடங்குகிறது. குளிர் சாதன வசதி இல்லாமலும், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, அதன் புறநகர்ப் பகுதிகளில் 1400 மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மகளிர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி உள்ளிட்டப் பேருந்து பயணிகள் இன்று முதல் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம். இதற்கான மாதிரி பயணச்சீட்டு சிவப்பு, நீலம், ரோஸ் உள்ளிட்ட நிறங்களில் வெளியிடபட்டது.

'சிவப்பு, நீலம், ரோஸ்...' - இலவச மாதிரி டிக்கெட் வெளியீடு

கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்குப் பின்பு பொது போக்குவரத்து சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் சென்னையில் 40 நாட்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கியது.

மெட்ரோ ரயிலில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

Last Updated : Jun 21, 2021, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.