சென்னை: அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் இரண்டு நாள் முழு வேலைநிறுத்த போராட்டம் இன்று (மார்ச்28) வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாசலம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது , 'ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கை சாதாரண மக்களுக்கு எதிராக உள்ளது. விவசாயம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் நெருக்கடியில் உள்ளது. அந்த சுமையை பொது மக்கள் மீது இறக்குகின்றது ஒன்றிய அரசு. இன்று 4 லட்ச ஊழியர்கள் அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுத்துறை வங்கி: தனியாரிடம் பணம் பாதுகாப்பு இல்லை என்றும், பொதுத்துறை வங்கி இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இயலும் முடியும். அதற்கு பொதுத்துறை வங்கி தேவை எனவும், நாடு வளர்ச்சி என்றால் பெருநிறுவன வளர்ச்சி மட்டும் இல்லை எனறும் கூறினார்.
விவசாயம் உள்ளிட்ட பல்வேறு வகையிலான வளர்ச்சி தான் உண்மையான வளர்ச்சி. இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு என்ற ஒன்றை அரசாங்கம் அழிக்க நினைக்கின்றனர். ஓய்வூதியத்தை விலைவாசியோடு இணைத்து கொடுக்க வேண்டும்.
புதிய திட்டம் கொண்டு வந்து பாதுகாப்பு இல்லாமல் கொடுக்கின்றனர். 25 கோடி பெண்கள் பணியில் இருக்கின்றனர். அவர்களுக்கு மகப்பேறு விடுப்பு தர வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு-கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தம்.. பொதுமக்கள் கடும் அவதி...