ETV Bharat / city

’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி! - பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்

சென்னை: 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

sengottaiyan
sengottaiyan
author img

By

Published : Dec 28, 2020, 4:58 PM IST

சென்னை அமைந்தகரையில் அம்மா மினி கிளினிக்கை இன்று திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ” வேலூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம் காவி நிறத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதார பாடத்தில் வள்ளுவரின் குறளை எடுத்துக்கூறி, காவி படத்தை போட்டு விட்டனர். கிறிஸ்துமஸ் அன்று கல்வி தொடர்பான எந்த நிகழ்ச்சியும் ஒளிபரப்பக்கூடாது எனக் கூறியும், தங்கபாலுவின் தொலைக்காட்சியில் அதனை வெளியிட்டு விட்டனர். இது தொடர்பாக தொடர்புடைய அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நலத்திட்டங்களை விரைந்து வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கு மாணவர்கள் வராத சூழலிலும் அவர்களுக்கான மிதிவண்டிகள், சீருடைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!

அண்டை மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாகவும், பெரும்பாலான பெற்றோர் அஞ்சுவதாலும் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. ஆனால், உறுதியாக பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிப்பதற்கான வாய்ப்பில்லை. 10,11,12ஆம் வகுப்புகளுக்கு நிச்சயமாக பொதுத்தேர்வு நடத்தப்படும். முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று விரைவில் அதற்கான அட்டவணை வெளியாகும் “ என்றார்.

இதையும் படிங்க: ’எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றினால் யுத்தம் செய்வோம்' - இயக்குநர் கௌதமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.